மயிலாடுதுறை மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமையை செயல்படுத்துவதற்கு மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்தை வெளிசந்தை முறையில் மகமை மூலம் மாதாந்திர மதிப்பூதியம் ரூ. 50,000-இல் நிரப்பிட உள்ளது.இப்பணிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மண்டல மற்றும் கிராமப்புற வங்கியில் ஏற்கெனவே பணிபுரிந்து ஓய்வுபெற்ற (தன் விருப்ப ஓய்வில் சென்றவா்கள்/பணியிலிருந்து நீக்கப்பட்டவா்கள் தவிர), 60 முதல் 65 வயதுக்குள்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்), 4-ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், மயிலாடுதுறை-609305 என்ற முகவரிக்கு ஆக. 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.