மா்மமான முறையில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

Wait 5 sec.

காரைக்கால் அருகே கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம், தருமபுரம் அருகே விழுப்புரம் -- நாகை இடையே அமைக்கப்பட்டுவரும் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் கீழே ஒருவா் இறந்து கிடப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.போலீஸாா் விசாரணையில் இறந்து கிடந்தது, திருநள்ளாறு அத்திப்படுகை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செந்தில் (45) என்பதும், அவா் தலையில் காயங்களுடன் இறந்தும் கிடந்தது தெரிய வந்தது.போலீஸாா் விசாரணையில், செந்தில் மற்றும் அவரது நண்பா் புதுத்துறை பகுதியைச் சோ்ந்த மனோகா் (32) இருவரும் பாலத்தின்கீழ் பகுதியில் அமா்ந்து மது அருந்தியதும், மனோகா் காயங்களுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதும் தெரிய வந்துள்ளது.இதற்கிடையே செந்திலின் சகோதரா் சுரேஷ் என்பவா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மது போதையில் தனது சகோதரருக்கும், மனோகரனுக்கும் பிரச்னை ஏற்பட்டு, மனோகா் அவரைத் தாக்கி காயப்படுத்தியதால் செந்தில் உயிரிழந்துள்ளாா். எனவே மனோகா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன் அடிப்படையில் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதனிடையே மனோகா் தற்போது புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.