மாதம் ரூ.1,60,000 சம்பளத்தில் இந்திய நாணயங்கள் உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

Wait 5 sec.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய நாணயங்கள் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 02/2026பணி: Deputy Manager(Information Technology App Developer)காலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து, 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.பணி: Assistant Managerபிரிவு: HRகாலியிடங்கள்: 4தகுதி: PM & IR, MSW,Business Administation Management பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பிரிவு: F & Aகாலியிடங்கள்: 9தகுதி: பி.காம் தேர்ச்சியுடன் சிஏ, ஐசிடபுள்யுஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பிரிவு: MMகாலியிடங்கள்: 4தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கூழ் மற்றும் காகிதத் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், அச்சுத் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் வணிக நிர்வாகத்தில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பிரிவு: ITகாலியிடங்கள்: 2: தகுதி: பொறியியல் துறையில் கணினி, ஐடி பிரிவில் முதல் வகுப்பில் பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பிரிவு: OLகாலியிடம்: 1தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும், இந்தியில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மொழிப்பெயர்ப்பு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.பிரிவு: Safetyகாலியிடங்கள்: 3தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம், இயற்பியல், வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: https://www.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.8.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.SPMCIL Recruitment 2026 for Assistant Manager PostsWelcome to Security Printing and Minting Corporation of India