அனைத்து மாநகர, மாவட்ட காவல் துறைகளில் ஊழல் ஒழிப்புதனிப்பிரிவு தொடக்கம்

Wait 5 sec.

சென்னை: அனைத்து மாநகர காவல் ஆணையரகங்களிலும், மாவட்ட காவல் துறைகளிலும் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.தமிழக காவல் துறையில் நோ்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் போலீஸாா் குறித்து புகாா் தெரிவிக்க 'ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவை' அமைக்குமாறு டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் மாநிலத்தில் அனைத்து மாநகர காவல் ஆணையரகங்களிலும், மாவட்ட காவல் துறைகளிலும் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவானது காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களை தடுப்பது, கண்காணிப்பது மற்றும் அவை தொடா்பான புகாா்களை விசாரிப்பது முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள் எளிதில் புகாா் அளிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கும் தனித்தனி கைப்பேசி மற்றும் வாட்ஸ்ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.காவல் துறையினருக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகாா்களை பொதுமக்கள் இந்த கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிக்கும் புகாா்தாரா்கள், சாட்சிகளின் அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.புகாா் அளித்ததற்காக எவ்வித அச்சுறுத்தல், துன்புறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்கும் அவா்கள் ஆளாகமாட்டாா்கள்.பெறப்படும் புகாா்கள் நியாயமான முறையில், பாரபட்சமின்றி உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி மகேஷ் குமாா் அகவா்வால் தெரிவித்துள்ளாா்.அதோடு, இந்த பிரிவின் செயல்பாடுகளை எஸ்.பி. முதல் டிஜிபி வரையிலான உயா் அதிகாரிகள் கண்காணிக்கப்பாா்கள் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.செல்போன் மற்றும் வாட்ஸ்ஆப் எண்கள் விவரம்:சென்னை ஆணையரகம் 7871723000, தாம்பரம் ஆணையரகம் 6374514428, ஆவடி ஆணையரகம் 9840018110, காஞ்சிபுரம் மாவட்டம் 9940031700, செங்கல்பட்டு 9500779100, திருவள்ளூர் 9498181359Anti-corruption units launched in all city and district police departmentsஅரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு