ஜோசியக்காரர் சொன்னால்தான் கோப்புகளை முதல்வர் விஜய் பார்ப்பாரா? பேரவையில் காராசார வாதம்!

Wait 5 sec.

ஜோசியக்காரர் சொன்னதால்தான் கோப்புகளை முதல்வர் பார்ப்பாரா? என்று பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "முதல்வர் தன்னுடைய மேசையில் 3 கோப்புகள் இருப்பதாக திமுக அரசைக் குற்றம்சாட்டும் வகையில் பேசினார். அதை அவர் பார்க்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? ஜோசியக்காரர் சொன்னதால்தான் முதல்வர் பார்ப்பாரா?" என்று கேட்டார்.உடனே ஆதவ் அர்ஜுனா, "மிசாவைப் பார்த்த தனிப்பெரும் இயக்கமான திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தவறுகள் மீது ஆதாரத்துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதல்வர் அன்று சொல்ல வந்தது. இவர்கள் செய்யாத ரீல்ஸா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் யார் பெயரைக் கூறி பதவியேற்றுக்கொண்டார்கள்?2021 தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நேரலை செய்யப்படும் என்று சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?" என்று கூறினார்.அப்போது பேரவைத் தலைவர், "முதல்வர் எப்போது வருகிறார், எவ்வளவு நேரம் பணி செய்கிறார், கோப்புகளைப் பார்ப்பது குறித்து எல்லாம் அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். முதல்வர் யாரையும் கலந்தாலோசிக்காமல் சுயமாகவே தன்னுடைய அறிவாற்றலால் முடிவெடுக்கும் திறமையை இந்த 3 மாத காலமாக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கோப்புகள் அவருடைய ஆய்வில் இருக்கிறது. அந்தத் துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன் என்று கூறினாரேதவிர அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று கூறினார். நிர்மல் குமார்: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டது எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது. அனைத்து துறைகளிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதயநிதி: நாங்கள் ஒரு கேள்வி கேட்டால் வேறு பதில் சொல்கிறார்கள். ஜோசியக்காரர் என்று சொன்னது தவறு எனச் சொல்கிறீர்கள், ஒரு ஜோசிக்காரரை அரசுப்பணியில் நியமித்து நீக்கியிருக்கிறீர்கள். எனவே அது தவறான வார்த்தை கிடையாது. சட்டப்பேரவையில் முதலில் நேரலை செய்தது திமுகதான் என்று கூறினார். Will Chief Minister Vijay review files only if an astrologer says so,Heated debate in the Assemblyபேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதி