சட்டப்பேரவையில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் நேரலையில் ஒளிபரப்பாவது மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.இன்றைய சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "சட்டப்பேரவையில் நாங்கள் பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள். ஆனால், இவையனைத்தும் நேரலையில் சென்று விட்டது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? சட்டப்பேரவை அலுவல் நேரலையை நாங்கள் எதிர்க்கவில்லை. அது ஒரு நல்ல முயற்சி, அதனை நாங்கள் பாராட்டுகிறோம்.அவைக்குறிப்பில் நீங்கள் நீக்கியவையெல்லாம் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது" என்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்து பேசிய பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், "குற்றச்சாட்டுகளை எந்தப் பக்கம் இருந்து வைத்தாலும், ஆதாரபூர்வமான கருத்துகளைச் சொல்வதன் மூலமாகவே அவையின் குறைந்தபட்ச மாண்பை நாம் காப்பாற்ற முடியும். அதே வேளையில், ஆதாரமற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டியது என்பது அவையின் மரபு.இனி வருங்காலத்திலும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது என்பது எனது தனிப்பட்ட உரிமை. ஏனெனில், அவையின் மாண்பை காப்பாற்றியாக வேண்டும்.மேலும், அவைக் குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்காமல் பேச முயற்சிப்பதும், ஆதாரங்கள் இல்லாமல் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில், இரு தரப்பினரும் ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் பேச வேண்டும் என நானும் மக்களும் விரும்புகிறோம். போகிற போக்கிலே அள்ளித் தெளித்துப் போகிற இடமல்ல இது. இங்கு பேசும்போது அவையின் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டும்.எல்லா பேச்சுகளை நீக்குவது என்பது எனது நோக்கமல்ல. இருப்பினும், அவைக்குப் பயன்தராத, நம் பண்பாட்டுக்கு உதவாத, அவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும், அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவேன்" என்று தெரிவித்தார்.பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிLoP Udhayanidhi questions the remarks to be expunged from the House records; Assembly Speaker JCD Prabhakar responds