இங்கிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெடிங்லியில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆக.19 முதல் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங், ஆலி ராபின்சன் தலா 5 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்துவரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 82 ஓவர்களில் 366/8 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 91, ஜோர்டான் 73, ஜோ ரூட் 66 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் சார்பில் சுழல்பந்துவீச்சாளர் அலி உஸ்மான் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். டெஸ்ட்டில் இதுதான் அவரது முதல் ஐந்து விக்கெட்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் இடது கை சுழல் பந்து வீச்சாளர்களில் 5 விக்கெட்டுகள் எடுத்தவர்களிலும் இவர்தான் முதல்முறை என்பது வரலாறு படைக்கப்பட்டுள்ளது.Ali Usman takes 5 wickets: England in a strong position!