ரூ. 100 கோடி வசூலில் இணைந்த டிசி!

Wait 5 sec.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதைநாயகனாக நடித்து வெளியான டிசி திரைப்படம், ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் “டிசி”. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவான டிசி, ஆக. 7-ல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.லோகேஷ் கனகராஜ் நடிப்பும் அனைவராலும் பாரட்டப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டிசி வெளியாகிய 15 நாள்களிலேயே உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. த்ரில்லர் இணையத் தொடரில் நடிக்கும் த்ரிஷா?Box office collection of the DC film featuring Lokesh Kanagaraj