தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து

Wait 5 sec.

விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மு. க. ஸ்டாலின்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட விழைகிறேன்.ரஜினிகாந்த்: தனது 28-ஆம் வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியை கட்டி காப்பாத்தி, தன்னுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும், விட்டு கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி, அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் தொல்.திருமாவளவன் M.P.65-ஆவது வயதில் நுழையும் இந்த தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.DMK President M. K. Stalin and actor Rajinikanth extended their birthday wishes to VCK President Thol. Thirumavalavan.திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து!