தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (ஆக. 17)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 17, திங்கள்கிழமை) சவரனுக்கு ரூ. 400 உயா்ந்து, ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.இன்றைய தங்கம் விலை தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை காலை தங்கம் கிராமுக்கு ரூ. 50 உயா்ந்து, ரூ.14,270 -க்கும், சவரனுக்கு ரூ. 400 உயா்ந்து, ரூ.1,14,160 -க்கும் விற்பனையாகிறது.கடந்த ஆக. 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை நிலவரம்வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 255 -க்கும், ஒரு கிலோ ரூ. 2,55,000 -க்கும் விற்பனையாகிறது. Chennai live gold and silver rate today (aug 17)