ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்யப்போவதாக சிஜேபி அறிவித்ததைத் தொடர்ந்து, பள்ளி முதல்வரின் முன் அனுமதியின்றி வெளியாட்கள் பள்ளிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பிரசாரத்தைக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே ஆக. 11 முதல் தொடங்கியுள்ளார். அதன்படி, அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை போன்ற புகார்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிஜேபி ஆய்வு மேற்கொண்டுவரும் சூழலில், முதல்வரின் அனுமதியின்றி வெளியாட்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாலை அரசு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் குறித்த காணொலிகள், செய்திகள் சமீபத்திய வாரங்களில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன.ஞாயிற்றுக்கிழமை காலை சமூக வலைத்தள பதிவு ஒன்றில், சிஜேபியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா, ராஜஸ்தானில் மோசமான நிலையில் உள்ள பள்ளிகளைத் தங்கள் கட்சி ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.மோசமான நிலையில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்யுமாறு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், அஜ்மீர், ஜோத்பூர், உதய்பூர், தோல்பூர், பரத்பூர், கோட்டா, பார்மர் மற்றும் ஹனுமன்கர் ஆகிய இடங்களிலிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.இப்பகுதிகளில், பள்ளிகளைச் சீரமைக்கக் கோரும் மக்களின் கோரிக்கைகளை நிர்வாகம் கண்டுகொள்ள மறுத்து வருகிறது. அடுத்த சில நாள்களில் இந்த இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று பார்வையிடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.பள்ளிகளில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக, அவற்றை உலகின் கண்களிலிருந்து மறைப்பதற்கான உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளதாக ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் டிகாராம் ஜூலி சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.Following the CJP's announcement that it would conduct inspections of government schools in Rajasthan, a ban has been imposed on outsiders entering the school premises without the prior permission of the school principal.'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு' சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! ஆதவ் vs உதயநிதி