தவெக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வருவாய் - மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான உரையில் கலந்துகொண்டு திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று உரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில்,“முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்கை பிடிப்பும், மு.க. ஸ்டாலினின் செயல்திறனும் ஒருங்கே பெற்று எந்த ஆதிக்கத்துக்கும் அஞ்சாமல் எதையும் துணிவுடன் எதிர்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். தவெக வாக்குறுதிகளில் எதையும் 3 மாதங்களில் நிறைவேற்றவில்லை. திமுகவின் வயது 75. ஒவ்வொரு வரும் போராட்டங்களில் பங்கேற்று, மக்களுக்காக சிறைக்கு சென்றவர்கள். கொள்கையில் அனைவரிடமும் சிறந்த கட்சி எங்களுடையது.கடந்த 5 ஆண்டுகளில் 27 லட்சம் பேருக்கு அரசு மனை பட்டா வழங்கியுள்ளோம். சென்னை போன்ற மாநகராட்சிகளில் 30 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு 77 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கினோம்.நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கரோனா காலத்திலேயே மக்களுக்கு ரூ. 4000 நிவாரணம் வழங்கினோம். தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 கிடைக்கும், வீட்டில் வேலையில்லாமல் இருந்தால் ரூ. 4,000 கிடைக்கும், சிலிண்டர் கிடைக்கும். இதெல்லாம் நீங்கள் வந்தால் கிடைக்குமா என்று மக்கள் கேட்கின்றனர். ஆனால், இதுவரை எதுவும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.Women's entitlement allowance of Rs. 2,000; where are the cylinders? Former DMK Minister questions!ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!