பிகார் சட்டப்பேரவையில் பாங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏவாக பிரசாந்த் கிஷோர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பேரவைத் தலைவர் பிரேம் குமார் முன்னிலையில் அவர் உறுதிமொழி எடுத்து எம்எல்ஏ-வாக பதவியேற்றார். பங்கிப்பூர் தொகுதி பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனின் தொகுதியாகும். நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு தனது பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலமாக பிகாரில் பிரசாந்த் கிஷோர் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தார்.