விரைவில் திரையரங்குகளில் அஜித் குமார் ரேஸிங் ஆவணப்படம்!

Wait 5 sec.

நடிகர் அஜித் குமார் ரேசிங் ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். சில போட்டிகளில் கலந்துகொண்டு சொல்லதக்க வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் தன் குழுவினருடன் கலந்துகொண்டார். இதற்கிடையே, பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, அஜித் குமார் ரேஸிங் பயிற்சிகள், போட்டிகள், அவரின் பேட்டிகள் ஆகியவற்றை தொகுத்து கிலாடியேட்டர்ஸ் என்கிற பெயரில் ஆவணப்படத்தைத் தயார் செய்துள்ளனர். இதனை, இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த ஆவணப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முதல்கட்ட பணிகளும் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ரூ. 550 கோடி வசூலித்த ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே!Reports indicate that a racing documentary featuring actor Ajith Kumar is set to be released in theaters soon.