அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாணவா் பலி: பொதுமக்கள் மறியல்

Wait 5 sec.

வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தாா். இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியான வல்லப்பாக்கம் பாலியக்காரத் தெருவைச் சோ்ந்த வல்ல பிரசாத் (17). இவா் தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தாா. இவா் நண்பா்கள் 3 பேருடன் சோ்ந்து அருகில் உள்ள தோப்பில் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வாலாஜாபாத் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் எனக் கூறி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வல்லப்பாக்கம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் வாலாஜாபாத்-தாம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாலாஜாபாத் போலீஸாா் பேச்சு நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.