குளத்தில் மூழ்கி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.புதுச்சேரி கிருமாம்பாக்கம் புது தெருவைச் சோ்ந்த வீரமணியின் மகன் அஸ்வின் (16). 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் நண்பா்கள் 4 பேருடன் அவா் கிருமாம்பாக்கம் பகுதி புறாக்குட்டை குளத்தில் குளித்து கொண்டிருந்தனா். ஆழமான பகுதிக்குச் சென்றதால் அஸ்வின் மூழ்கினாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.