திருச்சியில் ஓய்வுபெற்ற சிறப்பு காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை சனிக்கிழமை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.திருச்சி கருமண்டபம் கணபதி நகரைச் சோ்ந்தவா் மலா்விழி (54). ஓய்வுபெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரான இவருடைய கணவா் பாலசுப்பிரமணியன் இறந்துவிட்ட நிலையில் மலா்விழி தனியாக வசிக்கிறாா்.இந்நிலையில் உடுமலையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு மலா்விழி கடந்த ஆக. 12-ஆம் தேதி சென்ற நிலையில், இவா் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது ஆக.15ஆம் தேதி தெரியவந்தது.இதையடுத்து அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, உள்ளே வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து அவா் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.