ஓடிடி காண வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.மகாராஜாஇயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, சாச்சனா, மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ராட்சசன்விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராட்சசன். இந்தப் படத்தை அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் தளங்களில் காணலாம்.மாநாடுநடிகர் சிம்பு - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இந்தப் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்கலாம்தெகிடிஅசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெகிடி.அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கியிருந்த இந்தப் படத்தை, ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.துருவங்கள் பதினாறுகார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான துருவங்கள் பதினாறு படம், ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.மேலும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராகவன், அஸ்வின் குமார், யாஷிகா ஆனந்த், பாலா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.துப்பறிவாளன்மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன்.இந்தப் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் தளங்களில் காணலாம். சைக்கோமிஷ்கின் இயக்கியிருந்த சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அதிதி ராவ், நித்யா மெனன், ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.தம்பிஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, நிகிலா விமல், சத்யராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தம்பி.இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் தளங்களில் பார்க்கலாம்.குரங்கு பொம்மைஇயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், குமரவேல், பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் குரங்கு பொம்மை.இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 தளங்களில் காணக் கிடைக்கிறது.விக்ரம் வேதாபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா.இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.Let's take a look at the suspense thriller movies worth watching on OTT platforms.ஓடிடியில் பார்க்க வேண்டிய ரொமான்டிக் படங்கள்!