மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகே, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால், இரவு பகலாக நீருக்குள்ளேயே வாழ்ந்து வந்த சிறுவனுக்கு உதவ அனந்த் அம்பானி முன் வந்துள்ளார்.பெல்டாங்காவைச் சேர்ந்த இக்பால் என்ற சிறுவன் விமானம் மூலம் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிறுவன் இக்பாலுக்கு இருந்த விநோதமான உடல்நலக் குறைபாடு காரணமாக, அவர் குளத்துக்குள்ளேயே இருந்துகொண்டு நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்த விடியோ ஒன்று வைரலான நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்திருந்தன.அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற போது, சிகிச்சைக்கான செலவை மேற்கொள்ள முடியாமல், குடும்பத்தார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.தண்ணீரிலிருந்து வெளியே வந்தாலே, உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போல ஒரு எரிச்சல் உணர்வு இருப்பதால், அவர் எப்போதுமே தண்ணீருக்குள்ளேயே இருக்கும் நிலை இருந்துள்ளது.இது பற்றி தகவல் அறிந்ததும், அனந்த் அம்பானி, சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளார். தற்போது விமானம் மூலம் அவர் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக, பல மணி நேரம் தண்ணீருக்குள் இருப்பதால், அந்த சிறுவனுக்கு மோசமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.தற்போது அனந்த் அம்பானியால், இக்பாலுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கும், இயல்பு வாழ்வுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் முடிவு! த்ரிஷாவின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரமா?Anant Ambani comes to the aid of a boy who lived underwater, day and night!