மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திங்கள்கிழமை (ஆக. 17) குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்னையால் மக்களின் டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்கள் பழுதாவதாக ஊடகங்களில் வரும் செய்தி கவலையளிக்கிறது. வெயில் காலம் முடிந்தும் மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது. இந்த நிர்வாகத் தோல்வியும் அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீடுகள் மட்டுமல்லாது, கோவை, விழுப்புரம் போன்ற தொழில் நகரங்களில் நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளதாகத் தொழில்துறையினரே வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை இந்த தவெக அரசையே சாரும். மின் வாரியப் பராமரிப்புப் பணிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, இப்பிரச்சனைக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.நயினார் நாகேந்திரனின் எக்ஸ் பதிவு.அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!BJP State President Nainar Nagendran alleged on Monday (Aug. 17) that the TVK government does not know how to properly manage electricity demand.