பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள்! தமிழ்நாட்டிலிருந்து யார்?

Wait 5 sec.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை தேசியத் தலைவர் நிதின் நவீன் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் நிதின் நவீன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, அவரது தலைமையின் கீழ் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.இந்த நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான பட்டியலை நிதின் நவீன் வெளியிட்டுள்ளார்.ராஜஸ்தானைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தரகண்டைச் சேர்ந்த தீரத் சிங் ராவத், தில்லியைச் சேர்ந்த ராம் மாதவ் உள்பட 11 பேர் துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.தேசிய அமைப்புப் பொதுச் செயலராக பி.எல். சந்தோஷும், பொருளாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தேசிய பொதுச் செயலர்களாக 8 பேரும், தேசிய செயலர்களாக 16 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த எம். வெங்கடேஷன், தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.BJP chief Nitin Nibin announces names of new office bearers. Vasundhara Raje Scindia, Tirath Singh Rawat, Ram Madhav, Baijyant Jay Panda, D Purandeshwari, Rekha Verma, Varshaben Narendrabhai Doshi, Bharti Pravin Pawar, Manpreet Singh Badal, Lal Singh Arya, M. Nagaraja, Tariq… pic.twitter.com/dnPE95CDVY— ANI (@ANI) August 17, 2026New office bearers for the national BJP! Who is from Tamil Nadu?ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!