உக்ரைனில் ஆலையைச் சீரமைக்கும் பணியில் ஆர்சிலர் மிட்டல்!

Wait 5 sec.

புதுதில்லி: உக்ரைனில் உள்ள தனது எஃகு ஆலையின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 13 தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் காயமடைந்ததாக தெரிவித்தது. இந்நிலையில், ஆலையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிமுறைகளை வகுத்து வருவதாக நிறுவனம் இன்று தெரிவித்தது.இந்த தாக்குதலால், உலை சார்ந்த முக்கிய உற்பத்தி வசதிகள் சேதமடைந்தன. இதனால் ஆலையின் உற்பத்திப் பணிகள் பகுதியளவு நிறுத்தப்பட்டன. தற்போது, ​​சேதத்தின் அளவு மற்றும் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான காலக்கெடு குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தத் தாக்குதலில் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் உயிரிழந்ததாகவும் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தது.தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவசரக்கால நடவடிக்கை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், தொழிலாளர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர். தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.Arcelor Mittal said the company is working on strategies to restore operations at its steel plant in Ukraine which was hit by a missile strike.டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து ரூ. 95.61 ஆக நிறைவு!