இளைஞர்கள் வாக்களித்த ஆட்சி; ஆனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை (ஆக. 17) பேசியுள்ளார்.தவெகவின் 100 நாள் ஆட்சி எப்படியிருக்கிறது? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்து பேசியதாவது:100 நாள்கள் கடந்திருக்கிறது அவ்வவுதான். வேறொன்றும் இல்லை. மாற்றம் மாற்றம் என்று சொன்னார்கள். ஆனால், அதேதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த மாற்றமும் எனக்குத் தெரியவில்லை.ஏனென்றால், கஞ்சாவால் பாதிக்கப்பட்டதால், மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு உயிரிழந்து விட்டார்கள். ஒன்று அமுதன், மற்றொன்று தனுஷ். இதுவே ஒரு உதாரணம். இதைவிட சொல்ல என்ன இருக்கிறது?மாற்றம் என்று சொல்லி வந்தால் என்ன மாற்றம்? தமிழ்நாடு முழுக்க திண்டுக்கல், கிருஷ்ணகிரி போன்ற பல்வேறு இடங்களில் பாலியல் குற்றங்கள் பெருகியிருக்கிறது. நாங்கள் சட்டப்பேரவைக்கு வராத இந்த நான்கு நாள்களில் நடைபெற்ற விஷயங்களைத்தான் சொல்கிறேன். அத்தனைப் பாலியல் வன்கொடுமைகள் தமிழ்நாடு முழுக்க நடந்துள்ளது.பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கிறது. இதற்குக் காரணம் கஞ்சா மற்றும் போதை கலாசாரம். இளைஞர்கள்தான் வாக்களித்து இந்த ஆட்சியைக் கொண்டு வந்திருகிக்கிறார்கள். ஆனால், அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறதுதான் உண்மை என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுDMDK General Secretary Premalatha Vijayakanth stated on Monday (Aug. 17) that although the youth voted for the current government, their future remains uncertain.