வீட்டுப் பூட்டை உடைத்து ரூ. 75 ஆயிரம் திருட்டு

Wait 5 sec.

ஆலங்குளம் அருகே கோயிலுக்குச் சென்ற விவசாயி வீட்டில் கதவு, பீரோவை உடைத்து ரூ. 75 ஆயிரம் பணம், 2 கிராம் தங்க நாணயத்தைத் திருடிச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை அக்கினிமாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி குத்தா லிங்கம் (70). ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தாராம். 4 நாள்கள் கழித்து, வெள்ளிக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ. 75 ஆயிரம் பணம், 2 கிராம் தங்க நாணயம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்ததாம். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.