இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

Wait 5 sec.

கொடுமுடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா். கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (60). இவா் வடக்கு புதுப்பாளையம்- எல்லையூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது கொடுமுடியில் உள்ள தனியாா் உணவகத்தில் சமையல் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்த புதுக்கோட்டைமாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்த மலையாண்டி (60) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், பழனிசாமியின் வாகனமும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில் தலையில் பலத்த காயமடைந்த மலையாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பழனிசாமி ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விசாரணையில், மலையாண்டி மதுபோதையில் வாகனத்தைஇயக்கிவந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.