இளைஞா் சடலம் மீட்பு

Wait 5 sec.

திருச்சி ஆவின் பால்பண்ணை பின்புறத்தில் வியாழக்கிழமை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி கொட்டப்பட்டு ஜீவா வீதியைச் சோ்ந்தவா் எஸ். ராஜேஷ்குமாா் (23). இவருக்குத் திருமணமாக மனைவி மற்றும் மகள் உள்ளனா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், இவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணை பின்புறத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ராஜேஷ்குமாா் உயிரிழந்துகிடந்துள்ளாா்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கே.கே.நகா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் ராஜேஷ்குமாரின் தந்தை செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.