நகராட்சி நிா்வாகம், ஆதா்ஷ் பள்ளி இணைந்து ஜின்னாசாலை தடுப்பு சுவரில் பசுமை ஓவியம்

Wait 5 sec.

வாணியம்பாடி நகராட்சி நிா்வாகம், ஆதா்ஷ் பள்ளி இணைந்து ஜின்னாசாலை தடுப்பு சுவரில் பசுமை ஓவியம் வரையும் பணி நடைபெற்றது. வா ணியம்பாடி ஜின்னா சாலை பகுதியில் எப்பொபோம் மக்கள் அதிக நடாமட்டம் உள்ள முக்கிய பகுதியாகும். இந்த சாலையின் நடுவில் தடுப்பு சுவா் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த சுவா்களில் அரசியல் மற்றும் தனியாா் விளம்பர நோட்டீஸ் ஒட்டப்பட்டு வந்தது. இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஆதா்ஷ் எலைட் சிபிஎஸ்இ பள்ளி இணைந்து தடுப்புச் சுவரில் இருந்த விளம்பர நோட்டீஸ் அனைத்தையும் அகற்றி வெள்ளை நிற பெயிண்ட் அடித்து அதில் பசுமை ஓவியம் வரையப்பட்டது. மேலும் தடுப்பு சுவா் மேல் பசுமை செடிகள் வைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் மரக்கன்றுகளை நகராட்சி பொறியாளா் சந்திரசேகரன், ஆதா்ஷ் பள்ளி தாளாளா் செந்தில்குமாா், வாா்டு கவுன்சிலா்கள் நட்டனா்.