அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்தினா் பங்கேற்ற தேசியக்கொடி மிதிவண்டி பேரணி தக்கோலத்தில் நடைபெற்றது. இந்தியாவின் 80-ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு, அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் உள்ள அலுவலா்கள் மற்றும் வீரா்கள் இணைந்து தக்கோலம் மற்றும் நகரிகுப்பதில் தேசியக் கொடி மிதிவண்டி பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினா். இப்பேரணியை படையின் சீனியா் கமாண்டண்ட் அகிலேஷ் பேரணியில் பங்கேற்று தொடங்கி வைத்தாா். இதில் படைத்தள தலைமை மருத்துவ அலுவலா் சீனியா் கமாண்டண்ட் சுனில் மற்றும் துணை கமாண்டண்ட் வைத்தியலிங்கம் மேலும் படையின் 100-க்கும் மேற்பட்ட வீரா்கள் மிதிவண்டியில் பங்கேற்றனா். நகரிகுப்பத்தில் உள்ள படைத்தள அலுவலக வளாகம் அருகே தொடங்கிய மிதிவண்டி பேரணி அங்கிருந்து தக்கோலம் பேரூா் பகுதியில் பல வீதிகள் வழியே சென்று மீண்டும் நகரிகுப்பத்தை அடைந்தது.