ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு, இன்று(ஆக. 18) 3வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதையடுத்து, இந்த இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 12,500 கன அடி வீதம் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. திங்கள்கிழமை நிலவரப்படி(ஆக. 17) விநாடிக்கு 12,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று(ஆக. 18) விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்தது.இதையடுத்து ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவார் பாணி, சினி அருவி, பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு, 3வது நாளாக இன்றும் தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.The water inflow into the Cauvery River at Hogenakkal increased to 14,000 cubic feet per second on Tuesday.நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு என்று சொன்னவர் ராகுல்: காங்கிரஸ்