மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஆக. 18), விநாடிக்கு 12,350 கன அடியாக அதிகரித்துள்ளது.நேற்று மாலை, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 12,174 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 12,350 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 82.13 அடியிலிருந்து 82.70 அடியாக உயர்ந்துள்ளதுஅணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 44.70 டிஎம்சியாக உள்ளது.The inflow of water into Mettur Dam has increased to 12,350 cubic feet per second today (August 18).ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு! பரிசல் இயக்க 3வது நாளாகத் தடை!