கர்நாடக பேரவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ். பாட்டீல் தேர்வு!

Wait 5 sec.

கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ். பாட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்த சித்தராமையா கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, ஜூன் மாதம் புதிய முதல்வராகப் பதவியேற்ற டி.கே. சிவகுமாரின் அமைச்சரவை முழுவதுமாக ஆக.3 அன்று நிரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் சிவகுமாரின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றதால் சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்து வந்த யூ.டி. காதர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, இடைக்கால பேரவைத் தலைவராக டி.பி. ஜெயசந்திரா பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக. 14) நடைபெற்ற பேரவைத் தலைவருக்கான தேர்தலில் முதல்வர் டி.கே. சிவகுமாரின் ஆதரவுபெற்று போட்டியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் குருபடகௌடா சங்கனகௌடா பாட்டீல் (எ) ஜி.எஸ். பாடீல் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்தலை, எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் ஜனதா தளம் ஆகியவை புறக்கணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.எஸ். பாட்டீஸ் 4 ஆவது முறையாக ரோன் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.கத்திக்குத்து! சிகிச்சை முடிந்து பஞ்சாப் புறப்பட்டார் சுக்பீர் சிங் பாதல்!Senior Congress leader G.S. Patil has been elected as the Speaker of the Karnataka Legislative Assembly.