திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை கூடாது என்ற இடைக்கால உத்தரவை ஆக.21 வரை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. மேலும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய எ.வ. வேலுவின் வழக்கை ஆக 21ஆம் தேதிக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் ஒத்திவைத்தார். ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகக் கூறி ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த வழக்கில், எ.வ.வேலுவை தேடப்படும் நபராக அறிவித்து, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கையும், ‘லுக் அவுட்’ நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘லுக் அவுட்’ நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள முறைகேடு வழக்கு, ‘லுக் அவுட்’ நோட்டீஸை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் கடந்த முறை மீண்டும் விசாரணைக்கு வந்தன. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஊழல் தடுப்புத்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை ஆக.14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். மேலும், இந்த வழக்கில் எ.வ.வேலுவுக்கு அழைப்பாணை வழங்கி விசாரணையை தொடரலாம் என அனுமதி வழங்கிய நீதிபதி, எ.வ.வேலு மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஆக.14-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார்.இதனிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் எ.வ.வேலு மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அறப்போா் இயக்கம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இடையீட்டு மனுவுக்கு எ.வ.வேலு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையையும் ஒத்திவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.The Madras High Court on Friday ordered that no coercive action should be taken against former DMK Minister E.V. Velu.லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் விசாரணைக்கு ஆஜர்!