மும்பை: வெளிநாடுகளில் டாலருக்கு நிகரான பிற நாடுகளின் நாணய மதிப்புகள் சரிந்ததையடுத்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிலைபெற்றது.அரசியலில் நிச்சயமற்ற சூழலில், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருவதும் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், இந்திய ரூபாய் மதிப்பு அழுத்தத்தில் இருந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.39 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ரூ. 95.38 முதல் 95.44 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், நேற்றைய வர்த்தக நாள் முடிவை விட 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவடைந்தது.நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 95.45 ஆக நிறைவு பெற்றது.The rupee appreciated 3 paise to close at 95.42 against US dollar on Friday.கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!