ஆஸ்திரேலியாவில் நடிகை ராணி முகர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

Wait 5 sec.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராணி முகர்ஜி. இவர் பிளாக், நோ ஒன் கில்டு ஜெசிகா, ஹிட்ச்கி உள்ளிட்ட பெண்களை முதன்மையாகக் கொண்ட படங்களில் நடித்தன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இயக்கி நாயகனாக நடித்து வெளியான “ஹே ராம்” படத்திலும் ராணி முகர்ஜி நாயகியாக நடித்திருந்தார். மேலும், இந்திய அரசு வழங்கும் ஒரு தேசிய விருதையும், ஏராளமான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் அவர் வென்றுள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் நடிகை ராணி முகர்ஜிக்கு அந்நாட்டின் லா ட்ரோப் பல்கலைக்கழகம் இன்று (ஆக. 14) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்தியத் திரைத்துறை, மனிதாபிமான உதவிகள் மற்றும் சமூக நலனுக்கானப் பணிகள் உள்ளிட்டவற்றில் அவரின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கர்நாடக பேரவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ். பாட்டீல் தேர்வு! An Australian university has awarded an honorary doctorate to popular Bollywood actress Rani Mukerji.