தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்பனை செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ - FSSAI) நடத்திய சோதனையில் என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 10 பிராந்தி வகைகள் மற்றும் ஒரு ரம் வகையில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து 11 வகை மதுபானங்களையும் மறுஉத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மதுபானங்களை கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தயாரிப்புகளை நிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான அறிவுறுத்தல்களை விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு மண்டல மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.என்னென்ன பிராண்டுகள்?VSOP EXSHAW GOLD BRANDY - விஎஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்திLOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY - லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்திMc Dowells VSOP Brandy (Blended Brandy) - மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி (பிளெண்டட் பிராந்தி)NO.1 McDowells Fine Brandy (Indian Brandy) - நெ.1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி (இந்திய பிராந்தி)MENSCLUB Deluxe Brandy (Indian Brandy) - மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி (இந்திய பிராந்தி)HONEY BEE FINE Brandy (Indian Brandy) - ஹனி பீ ஃபைன் பிராந்தி (இந்திய பிராந்தி)ENRICA VSOP SELECT BRANDY - என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்திENRICA PLATINUM RESERVE XO BRANDY - என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்திENRICA PREMIUM FRENCH BRANDY - என்ரிகா பிரீமியம் பிரெஞ்சு பிராந்திVEERAN SPECIAL BRANDY - வீரன் ஸ்பெஷல் பிராந்திENRICA OLD INDIE CLASSIC DARK RUM - என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம்Ban on the sale of 11 types of liquor at TASMAC shops! Which brands are they?தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை!