கடவுளின் குழந்தை நான்... நள்ளிரவில் பதிவிட்ட விஷால்!

Wait 5 sec.

நடிகர் விஷால் மகுடம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பாக நள்ளிரவில் தனது எக்ஸ் பக்கத்தில், “கடவுளின் குழந்தை நான்” எனக் கூறியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் முன்னதாகக் கூறியிருந்தார்.இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் இன்று (ஆக.14 ) திரையரங்குகளில் வெளியானது. இது குறித்து நள்ளிரவு 1.54 மணிக்கு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் விட்டுத்தர மாட்டேன். ஆமாம், நான் எப்போதுமே விட்டுத்தர மாட்டேன். நான் விஷால் ’கடவுளின் குழந்தை’. எவ்வளவு சவால் வருகிறதோ அவ்வளவு நான் உயர்வேன். ஏனெனில் நான் எப்போதும் தயக்கமோ அவமானமோ இன்றி நிலைக்கண்ணாடியைப் பார்ப்பேன். ஏனெனில், எனது வேலையை மன உறுதியுடன் நம்பிக்கையுடன் செய்வதால் அந்தப் பணி சற்று கூடுதல் சிறப்புடன் நடிகராக ரசிகர்களை திருப்திப்படுத்த எனது வேலையைச் செய்து முடிக்கிறது. ரசிகர்களை நான் கடவுளுக்கு நிகராக மதிக்கிறேன். ஏனெனில் இன்று நான் திரைத்துறையிலும் சமூகத்திலும் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்க காரணமே அவர்கள்தான். மகுடம் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக வேண்டும் என்ற எனது 35 ஆண்டு கனவை உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறேன். கடந்த 14 மாதங்களாக நாங்கள் என்ன வேலை செய்தோம் என்பதை உங்களுக்குக் காட்ட காத்திருக்கிறோம். உலகம் முழுவதும் வெளியாகிறது. அனைவரும் வாருங்கள். உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றார்.I Will not give up. Yes I Will not give up. Neva Eva I AM VISHAL “GOD s CHILD”The more the challenges the more I Will rise coz I stand to look at the mirror without hesitation and shame coz I do my job with grit and determination and Will power and Will always go that extra… pic.twitter.com/pCtnQ4UV0M— Vishal (@VishalKOfficial) August 13, 2026அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய ஜூனியர் என்டிஆர்! Actor and Director Vishal pens emotional note on Magudam release: I am Gods Child