குன்னம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 17) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெண்மணி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் குன்னம், கல்லம்புதூா், அந்தூா், வரகூா், பெரிய வெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூா், கீழமாத்தூா், கொத்தவாசல் ஆகிய கிராமியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.