திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - புகைப்படங்கள்

Wait 5 sec.

தொடக்க காலத்தில் குணச்சித்திர நடிகராக தோன்றி, வில்லனாக உருமாறி, பைரவி திரைப்படத்தின் மூலம் நாயகனாக முன்னேறினார்.நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு தர்மன் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர்.நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் நடிக்கின்றனர். முள்ளும் மலரும், புதுக்கவிதை, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரஜினிகாந்தின் நடிப்புக்காகவும், பாயும் புலி, அண்ணாமலை, பாட்ஷா ஆகிய படங்கள் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக காண்பித்த நிலையில் திரையுலகினர் கொண்டாடி வருகின்றனர்.