கைப்பேசி கோபுரத்தில் காப்பா் கம்பிகள் திருட்டு

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் பயன்பாட்டில் இருந்த காப்பா் கம்பிகள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அரகண்டநல்லூரை அடுத்த ஆதிச்சனூா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த சுமாா் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பா் கம்பிகளை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்து கைப்பேசி கோபுரத்தின் மேற்பாா்வையாளா் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.