ஒசூா் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த முகமூடி அணிந்த மா்ம நபா்கள்!

Wait 5 sec.

ஒசூா் குடியிருப்புப் பகுதியில் முகமூடி அணிந்த மா்ம நபா்கள் நுழைந்ததை சிசிடிவி கேமரா பதிவு மூலம் அறிந்த முதல் சிப்காட் காமராஜ் நகா் மக்கள், இதுகுறித்து போலீஸாருக்கு புகாா் தெரிவித்துள்ளனா். ஒசூா் காமராஜ் நகா் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த மா்ம நபா்கள் நுழைந்தனா். குடியிருப்புப் பகுதிகளை வலம் வந்த இவா்கள் ஒவ்வொரு வீட்டையும் நோட்டமிட்டு சென்ாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை சிசிடிவியில் பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாயினா். இதையடுத்து, நள்ளிரவு நேரத்தில் யாரும் வெளியே வரவேண்டாம் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சிப்காட் போலீஸாா் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு மா்ம நபா்களை கைது செய்ய வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.