சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.தியாகராய நகா் மேட்லி முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ந.உஷா (53). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே காய்கறி கடைக்குச் சென்று, திரும்பி வந்து கொண்டிருந்தாா்.அவா், வீட்டின் அருகே வந்தபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் உஷாவிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா். அப்போது, அவா் தங்கச் சங்கிலியை பிடித்துக் கொண்டதால், அதன் ஒரு பகுதியை மட்டும் அந்த நபா்கள் பறித்துக் கொண்டு தப்பினா்.இது தொடா்பாக மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.