இசையமைப்பாளர் சாய் அபயங்கரைத் தாக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் பேசியதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். அட்டகத்தி திரைப்படத்தில் அறிமுகமாகி மெட்ராஸ், ஜிகர்தண்டா, காதலும் கடந்து போகும், வடசென்னை என பல வெற்றித் திரைப்படங்களுக்கு அசத்தலான இசைகளை வழங்கினார். தற்போது, சிவகார்த்திகேயனின் சேயோன், துருவ் விக்ரம் - 4, விக்ரம் - 63 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதேபோல், இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் தமிழ் இசையமைப்பாளர்களிலேயே தற்போது அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். எப்போதும், கைவசம் குறைந்தது 8 திரைப்படங்களையாவது வைத்திருக்கிறார். பாடல்களும் ஜென் ஸி தலைமுறையினரை அதிகம் ஈர்ப்பதால் பல இயக்குநர்களும் சாய் அபயங்கரையே நாடுகின்றனர். இந்த நிலையில், விடியோ ஒன்றில் பேசிய சந்தோஷ் நாராயணன், "மன்னார் அன்ப்ளக்ட் (unplugged) வடிவத்தை வெளியிடப்போகிறோம். அன்ப்ளக்ட் என்றால் பாடல் ஹிட் ஆகிவிட்டது என நம்ப வைப்பது” எனக் கூறினார். இதனைக் கண்ட ரசிகர்கள் சாய் அபயங்கர்தான் இப்படி அன்ப்ளக்ட் வடிவங்களை வெளியிடுவார்; சந்தோஷ் நாராயணன் நேரடியாகவே சாய் அபயங்கரைத்தான் தாக்குகிறார் என அவரை விமர்சித்து வருகின்றனர். சிலர் இதனை வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும் சந்தோஷ் நாராயணனின் இந்த விடியோ வெளியான பின்னர் சாய் அபயங்கர் தன் புதிய ஆல்பமான ‘ரதிமா’ பாடலின் அன்ப்ளக்ட் வடிவத்தை முதலில் வெளியிடலாமா? என ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இதனால், சந்தோஷ் நாராயணன் பேசியதில் சாய் அபயங்கர் சீண்டப்பட்டார் என்றே தெரிகிறது. இருந்தாலும், சாய் ரசிகர்கள் இது உங்கள் காலம் என ஆதரவாக கருத்திட்டு வருகின்றனர். தலையே சுத்துது... ஸ்பைடர் மேன் லாபத்தால் டாம் ஹாலண்ட் பெறப்போகும் சம்பளம்!Fans are criticizing Santhosh Narayanan for making remarks that appear to target music composer Sai Abhyankar.