கங்குலி பாணியில் லார்ட்ஸ் திடலில் கொண்டாடிய இந்திய கலப்பு மாற்றுத்திறனாளி அணியினர்!

Wait 5 sec.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற கடைசி டி20 ஆட்டத்தில் வென்ற இந்திய கலப்பு மாற்றுத்திறனாளிகள் அணியினர் கங்குலியின் புகழ்பெற்ற கொண்டாட்டத்தைச் செய்துள்ளது வைரலாகியுள்ளது.ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடு கொண்டவர்கள் கலப்பு மாற்றுத்திறனாளிகள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான டி20 தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.மொத்தம் ஏழு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 4-3 என வென்றது. இருப்பினும் கடைசி போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது. கடைசி போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 206/4 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பாக மஜித் மக்ரே 19 பந்துகளில் 63 ரன்களும் அர்ஜுன் கௌர் 44 பந்துகளில் 69 ரன்களும் குவித்தார்கள். அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 13.4 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹிலால் அகமது வானி 4, ஜயேஷ் பர்மார் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். கடைசி ஆட்டத்தில் 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியினர் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி போல லார்ட்ஸ் திடலில் ஜெர்ஸியை கழற்றி கொண்டாடினார்கள். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. When India wins at Lord’s, the celebrations hit different. A moment of pure cricketing joy on the Lord’s Balcony — coats off, spirits high, and the Tricolour flying with pride.118 runs. One unforgettable celebration.@imRaviKChauhan@official_idca pic.twitter.com/o6IuoRJto8— Differently Abled Cricket Council of India (@dcciofficial) August 19, 2026வெஸ்லி ஸோ உடன் புள்ளிகளில் சமன்செய்தும் பிரக்ஞானந்தா சிங்க்ஃபீல்டு கோப்பையை இழந்தது எப்படி?Indian mixed disability team recreates Ganguly's iconic Lord's celebration after beating England