பிகாரில் அரசின் திட்டங்களை காணொலியாக விளம்பரம் செய்யும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என மாநில அரசு அறித்துள்ளது.பிகாரில் மாநில அரசின் திட்டங்களை காணொலியாக உருவாக்கி, அதனை சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வோருக்கு ஊக்கத்தொகை அளிக்கும் புதிய விதிகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பிகார் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த திருத்தப்பட்ட விதிகளின்படி, பிகார் அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) உருவாக்கும் உள்ளடக்கங்கள், சரிபார்க்கப்பட்டு, 30 நாள்களுக்குப் பிறகு பெறும் ஒவ்வொரு லட்சம் பார்வைகளுக்கு (Views) ரூ. 10,000 பெறுவதற்கான தகுதிபெறும்.இவர்களின் சமூக ஊடகக் கணக்குகள், பக்கங்கள், சேனல்களில் பின்தொடர்பவர்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது சரிபார்க்கப்படும். ஏனெனில், சில சமூக ஊடகக் கணக்குகளில் போலியான பின்தொடர்பவர்கள் மற்றும் பார்வைகளும் காட்டுகின்றன.4 மாதங்களில் 22 மரண தண்டனை! ஒரு நீதிபதியால் 100 கொலை வழக்குகள் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்Bihar's offer to influencers that Make govt scheme videos, earn up to Rs 1 lakh