நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு தர்மன் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு போன்ற படங்களைப் போன்று இப்படம் இருக்குமென இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். அடுத்தாண்டு ஏப்ரலில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 வெளியானது. அப்படம் வெளியாகி 51 ஆண்டுகள் ஆன நிலையில், திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.இதனைக் கொண்டாடும் விதமாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தர்மன் படப்பிடிப்பில் படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதுதொடர்பான விடியோவை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 51 YEARSONE NAMEONE SUPERSTARCelebrating from the sets of DHARMAN #Dharman #KettaPaiyanSir #SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi… pic.twitter.com/EGfxbNGRtQ— Raaj Kamal Films International (@RKFI) August 15, 2026 Rajinikanth completes 51 years in the film industry! 'Dharman' film crew celebratesமீண்டும் இணையும் அஜித் குமார் - சிறுத்தை சிவா கூட்டணி?