சுதந்திர நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.சுதந்திர நாள் விழாவையொட்டி, தில்லி செங்கோட்டையில், நாட்டின் 80 ஆவது சுதந்திர நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சுதந்திர நாள் விழாவையொட்டி, தில்லி செங்கோட்டையில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்ற நிலையில், சிறப்புமிக்க இந்த நிகழ்வில், செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு சுதந்திர நாள் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து தேசியக் கீதம் இசைக்கப்பட்டு, இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி பறக்க மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தில்லி காவல்துறை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி.முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையைப் ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி.இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி.பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற மாணவர்கள்.