முதல் நாளில் 69% சந்தா பதிவு செய்த லலிதா ஜூவல்லரி ஐபிஓ!

Wait 5 sec.

புதுதில்லி: லலிதா ஜூவல்லரி மார்ட் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு, முதல் நாளான இன்று 69 சதவீத சந்தாவை பெற்றது.நிறுவனம் தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்காக தலா ரூ.5 முகமதிப்பு கொண்டு ஒரு பங்குக்கு ரூ.190 முதல் ரூ.201 வரை விலை வரம்பை நிா்ணயித்துள்ளது. அதே நிலையில், முதலீட்டாளா்கள் குறைந்தபட்சம் 74 பங்குகளுக்கும், அதன்பிறகு 74 பங்குகளின் மடங்குகளிலும் விண்ணப்பிக்காலம் என்றது.சில்லறை முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 74 சதவீதமும், நிறுவன முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 67 சதவீதமும், நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டில் 61 சதவீதம் சந்தா பதிவான நிலையில், லலிதா ஜூவல்லரி மார்ட்டின் ஐபிஓ ஆகஸ்ட் 19 அன்று நிறைவடைகிறது.இந்த வெளியீடு மூலம் கிடைக்கும் நிதி முக்கியமாக புதிய கிளைகளைத் திறக்கப் பயன்படுத்தப்படும் என்றது நிறுவனம்.1985 ஆம் ஆண்டு, சென்னை தி.நகரில் தனது முதல் கிளையைத் தொடங்கிய லலிதா ஜூவல்லரி மார்ட், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது.லலிதா ஜூவல்லர்ஸ் பங்குகள் ஆகஸ்ட் 24 அன்று மும்பை பங்குச் சந்தையிலும் பிறகு நிஃப்டி-யில் பட்டியலிடப்பட உள்ளன.