மதுப் புட்டிகள் விற்றவா் கைது

Wait 5 sec.

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே போலீஸாா் சோதனையிட்ட போது, மீனாட்சிபுரத்தை சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் நாகராஜ் (51) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்தனா். அவரிடமிருந்து 40 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.