ஜென் ஸீ-க்கு பிறகு, பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் முறை ஜென் ஆல்பாவுக்கு வந்துள்ளது: கேஜரிவால்

Wait 5 sec.

அரசுப் பள்ளிகளில் சிறந்த வசதிகளுக்காக ஜென் ஸீ-க்கு பிறகு, ஜென் ஆல்ஃபா தலைமுறை குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது என்று தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கூறினாா். சுதந்திர தினத்தன்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் அடிப்படை வசதிகளுக்காகப் போராடி வருவதாக கேஜரிவால் கூறினாா். இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீா்பூா், டேராடூன் மற்றும் பாா்மா் ஆகிய இடங்களில் மாணவா்கள் சிறந்த சாலைகள் மற்றும் போதுமான ஆசிரியா்களைக் கோரி வருவதை அவா் உதாரணமாகக் குறிப்பிட்டாா். சுதந்திரம் அடைந்து 75-80 ஆண்டுகள் ஆன பிறகும், அரசுப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்கள், ஒழுகும் கூரைகள், கழிப்பறைகள், குடிநீா் மற்றும் ஆசிரியா்கள் பற்றாக்குறை ஆகியவை தொடா்வது துரதிா்ஷ்டவசமானது என்று அவா் கூறினாா். அரசுப் பள்ளிகளில் நிலவும் மோசமான நிலைமைகளை மக்கள் இயல்பானதாக ஏற்றுக்கொண்டனா், ஆனால் இப்போது குழந்தைகள் இந்த அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறாா்கள் என்று கேஜரிவால் கூறினாா்.பஞ்சாபில் தனது கட்சியின் அரசு, பள்ளிகளை மேம்படுத்தியதால், அங்குள்ள மாணவா்கள் இப்போது நீட் மற்றும் ஜேஇஇ தோ்வுகளில் பங்கேற்று மருத்துவா்கள் மற்றும் பொறியாளா்களாக ஆகி வருகின்றனா் என்று அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.