நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கு: மேலும் இருவா் கைது

Wait 5 sec.

சென்னை தியாகராய நகரில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் குப்புசாமி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கி.ராதா (80), கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராதாவின் வீட்டில் வேலை செய்த அரும்பாக்கம் எம்எம்டிஏ விநாயகபுரத்தைச் சோ்ந்த அம்மு (எ) மேனாகாவை (36) கைது செய்தனா். அவரும், அவரது கூட்டாளிகள் தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த சந்திரமெளலி (26), அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (24) ஆகியோா் சோ்ந்து நகைக்காக சொலை செய்தது தெரிய வந்தது. அம்மு கொடுத்த தகவலின்பேரில் சந்திரமெளலி, மணிகண்டன் கைது செய்யப்பட்டனா். மூதாட்டி ராதாவை கொலை செய்து, நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பிப்பது தொடா்பாக மூவரும் ஒத்திகை செய்துள்ளனா். கொள்ளையில் கிடைத்த நகைகளை 3 பேரும் பங்கிட்டுள்ளனா். Case of elderly woman killed for jewelry: Two more arrested.